கரூரில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கருர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் கோமதி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் . மேலும் இது தொடர்பாக ஆசிரியர் , தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மனைவி மயக்கம் அடைந்து உயிரிழந்த பரிதாபம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.