Categories
மாநில செய்திகள்

“சிறுத்தையின் மர்ம மரணம்” ஓபிஎஸ் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்…. விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தோட்டத்தின் உரிமையாளரை காப்பாற்றுவதற்காக விவசாயியின் மீது பொய்யாக புகார் பதிந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதன் காரணமாக எம்பியின் தோட்ட மேலாளர்கள் ராஜவேல் மற்றும் தங்கவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு கால்நடை சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சிறுத்தையை சதி செய்து கொலை செய்து விட்டு அப்பாவி விவசாயி மீது பழி போட்டு கைது செய்துள்ளதாக கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி எம்பியின் தோட்ட மேலாளர் தங்கவேல் விவசாயியை வலுக்கட்டாயமாக மிரட்டி சிறுத்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள கூறி அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்து வனத் துறையினரிடம் கொடுத்துள்ளார்.

குற்றத்தை ஒத்துக்க சொல்லி வனத்துறையினரும் விவசாயியை கடுமையாக தாக்கி மனித உரிமை மீறலோடு நடந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்டத்தில் உரிமையாளர் மற்றும் மேலாளரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றாவிட்டால் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட தயங்க மாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |