Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடும் மர்ம கும்பல்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த மாதம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆறுமுகம் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கடந்த மாதம் 24ம் தேதி திருடப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

Related image

இதையடுத்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் தினந்தோறும் நள்ளிரவில் ஆடுகளை இரண்டு நபர்கள் திருடியதை கேட்டு அறிந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |