Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 10,00,000… யார் செய்திருப்பா… கோரிக்கை விடுத்த மீனவர்கள்…!!

ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் திடீர் குப்பத்தில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதியதாக வாங்கிய பைபர் படகை அப்பகுதியில் ஆற்றின் கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார். இதனை போல் அதே பகுதியில் வசிக்கும்  ரத்தினவேல் என்பவர் தனது பைபர் படகையும் அங்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த 2 படகுகள் மீது டீசலை ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த படகுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் 2 படகுகளும் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதில் பல மணி நேரம் போராடிய பிறகு தீயை அணைத்துள்ளனர். இதனால் அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட படகுகள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விபத்தில் எரிந்து நாசம் அடைந்து இருக்கும் இரண்டு படகுகளில் வைத்திருந்த 2 என்ஜின் மற்றும் வலை ஆகிய 10,00,000 ரூபாய் மதிப்புடைய மீன்பிடி பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ரத்தினவேல் மற்றும் கவியரசு ஆகியோர் இணைந்து தனித்தனியாக கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடன் தொகை மூலமாக வாங்கிய படகுகள் முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்த காரணத்தினால் புதிய படகுகள் வாங்குவதற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் மீனவர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |