விவசாயி ஒருவரின் வீட்டில் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தங்களுடைய வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து உள்ளது. இதனால் மயங்கிய தமிழரசி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணமூர்த்தி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தமிழரசிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தனது மனைவிக்கு தேவை உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதற்காக கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் பீரோவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்த நிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த ஏழு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.