வீட்டினுள் புகுந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எண்டப்பட்டியில் பகுதியில் தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் வைத்திருந்த விலை மதிப்புடைய செல்போனை திருடிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் முனியம்மாள், லட்சுமணன், முனுசாமி போன்றோர்களின் வீடுகளில் இருந்த விலை மதிப்புடைய செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.