விவசாயியாக பணிபுரியும் வாலிபர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விவசாயாக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனையடுத்து காலை நேரத்தில் கோவிந்தன் தனது நிலத்தில் பார்வையிடுவதற்காக அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் நிலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அருகில் உள்ள கரும்பு வயலில் பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கோவிந்தனை வழிமறித்து அரிவாளால் அவரது தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.