மூதாட்டி ஒருவரிடம் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம பெண் என 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக சின்ன பொண்ணு என்ற மூதாட்டி ஒருவர் காத்திருந்திருக்கிறார். அப்போது அவரது அருகில் இருந்த மர்ம பெண் உள்ளிட்ட 3 பேரிடம் மூதாட்டி குணமங்கலம் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்து எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அந்த ஊருக்கு செல்ல பேருந்து இல்லை என கூறியுள்ளனர். அதன்பின் தங்களுடன் காரில் வந்தால் அவ்வூரில் இறக்கி விடுவதாக அவர்கள் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இதை உண்மை என நம்பிய மூதாட்டி சின்னபொண்ணு அவருடன் காரில் சென்றுள்ளார். இந்நிலையில் அவர்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது மூதாட்டி சின்ன பொண்ணுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அதை குடித்த சிறிது நேரத்தில் மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை மயக்கம் தெளிந்ததும் மூதாட்டி தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும் தங்கத்தோடு ஆகியவற்றை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் தன்னை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் மயக்க மருந்தை கொடுத்து நகைகளை பறித்துச் சென்றது அவருக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மூதாட்டி சின்ன பொண்ணு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டிய கடத்திச் சென்று தங்க நகைகளை பறித்து தப்பிச்சென்ற மர்ம பெண் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.