Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ள யாரும் இல்லை என்று தெரிஞ்சு போச்சு… மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் மதுரைவீரன் கோவில் பகுதியில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் சென்று தூங்கியுள்ளார். அப்போது காலையில் அவர் வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஏற்கனவே திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் பாவடையும் அவர் மனைவி சுமதியும் வீட்டின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தோடு மற்றும் சங்கிலி உள்ளிட்ட 2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி சங்கிலி, கொலுசு ஆகிய பொருட்கள் காணாமல் போயிருந்தது.

இதனைத் தொடர்ந்து பாவாடை அவர் குடும்பத்தினருடன் மாடியில் தூங்கிக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு முன்பின் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்று தப்பி ஓடியுள்ளனர். இதில் திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 1, 00, 000 ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து சுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |