மருத்துவர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனாகல்லி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்த போது 12 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் இது பற்றி சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.