Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நோட்டமிட்ட மர்ம நபர்கள்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணை நடத்திவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்  பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் தர்மலிங்கம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பீரோவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர்.

ஆனால் பீரோவில் எதுவும் சிக்காத நிலையில் வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு வந்த தர்மலிங்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட முயன்ற மர்ம நபரை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |