பூட்டியிருந்த வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள், தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளனர். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அம்பேத்கர் நகரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சத்யா தனது குழந்தைகளுடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்துள்ளார். பின்னர் அதிர்ச்சியடைந்த சத்யா உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மாற்றும் 10,000 ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.