Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்காக தானா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி தலைப் பகுதியை மர்ம நபர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் வரை நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ரயில்களில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சொல்லாமல் மாதம்மாள் உயிரிழந்த காரணத்தினால் அவரை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். அதன்பின் மாதம்மாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மர்மநபர்கள் மது அருந்தி விட்டு புதைக்கப்பட்டிருந்த அவரின் உடலைத் தோண்டி தலையை வெட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் அவருடைய தலைப்பகுதியை தோண்டி கழுத்தை அறுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாதம்மாள் உடலை அடக்கம் செய்யும் போது அவரது கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை மட்டுமே அகற்றியுள்ளனர்.

பின் காதில் இருந்த கமலை உறவினர்கள் கழற்றுமாறு கூறியும் அவரது மகன்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அது கவரிங் கம்மல் என்பது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். இதனைத் தொடர்ந்து அந்த கம்மல் தங்கமாக இருக்கும் என நினைத்து அதை திருடுவதற்காக மர்ம நபர்கள் தலைப் பகுதியை மட்டும் தோன்றியதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |