கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல் துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் கிராமபுரத்தில் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை வந்து திறந்து பார்த்த போது உண்டியல் காணாமல் போனதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் பூஜை சாமான்களும் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் கோவிலை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது கோவிலின் பின்புறத்தில் இருக்கும் காலி இடத்தில் உண்டியல் கிடந்ததுள்ளது. அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு மர்மநபர்கள் உண்டியலை அங்கே வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.