அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த 5 பசுமாடுகள் நுறை தள்ளிய படி மர்மமாக இறந்துள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் கிராமத்தில் கோபி என்ற விவசாயி ஏழு பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார். தீவனத்தை உண்ட மாடுகளில் 5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால் 5 மாடுகளும் கீழே விழுந்து இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது .
மேலும் பாதிக்கப்பட்ட 2 மாடுகளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சொர்க்கம் என்னும் செயற்கையான மாட்டு தீவனத்தை முழுமையாக காய வைக்காமல் மாட்டிற்கு கொடுத்ததே மாடுகள் இறந்ததற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே முழு காரணம் தெரிய வரும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.