விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 பேர் உதவி ஆய்வாளர்கள் சதீஷிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட கடத்தல்காரர்கள் பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் மூன்று டிராக்டர்கள் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.