அவனியாபுரம் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும் மனைவி ராஜேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிலிருந்து கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி நகை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.