அமெரிக்காவில் நேற்று காலையில் தேவாலயத்தில் மர்ம நபர், பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்து 4 நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு நபர் காவல்துறையினரை தொடர்புகொண்டு, டெக்ஸாஸ் கோலிவில்லி என்ற நகரின் தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த தேவாலயத்தை சுற்றி 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
அந்த மர்ம நபர், பாகிஸ்தானின் நரம்பியல் வல்லுநர் சித்திக் அமெரிக்க சிறையில் இருக்கிறார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்திற்கு டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநர் கிரெக் அபோட் உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், பணயக்கைதிகளாக அந்த நபர் பிடித்து வைத்திருக்கும் நபர்களை உடனடியாக விடுவிக்க காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், அந்த நபர் பணயக்கைதிகளை விடுவித்ததாக டெக்ஸாஸ் ஆளுநர் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்த மர்ம நபர் யார்? அவர்களை எவ்வாறு விடுவித்தார்? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.