ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் சிலர் ஐ.நா மீது நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் சிலர் ஹெராத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பலர் காயமடைந்ததாகவும், பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஐ.நா. அதிகாரிகள் யாருக்கும் இந்த தாக்குதலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஐ.நா. தூதரகம் அரசுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.