சசிகலாவின் விஷயத்தில் இந்த இரண்டு பேரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சசிகலா தற்போது நலமாக இருக்கிறார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன.
மேலும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏழு அல்லது பத்து நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜராஜன் பேசுகையில், “சசிகலாவை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் சசிகலாவை அனுமதித்துள்ளனர். இதனால் சிறைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.