கொரோனோ வைரஸிடமிருந்து நம்மை ஓரளவுக்கு பாதுகாக்கும் n95 முக கவசங்களை சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்க சிறைச்சாலை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகளை சிறைக் கைதிகளிடம் ஒப்படைக்கலாம் என்று சிறைதுறைஅதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே கைத்தறி ஆடைகளை தயாரித்த அனுபவம் அவர்களுக்கு இருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான பணிகள் முதலில் புழல் சிறையில் தொடங்க உள்ளதாகவும் மூல பொருள்கள் வாங்கியபின் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.