அமெரிக்காவில் பெண் ஒருவர் காணாமல் போய்விட்டதாக குடும்பத்தாரால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சொந்த வீட்டிலேயே 2 மாதங்கள் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினாவில் லைன் என்னும் 70 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை 2 மாதங்களுக்கு முன்பாக காணவில்லை என்று அவருடைய குடும்பத்தார்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் இவர் தற்போது இவருடைய வீட்டிலேயே சடலமாக கிடைத்துள்ளார்.
அதன்பின் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த மருத்துவ பரிசோதனையின் முடிவில் இவரை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 70 வயதுடைய லைன்னை பராமரித்து வந்த எலிசபெத் என்னும் பெண்மணியின் மீது காவல்துறை அதிகாரிகள் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.