ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் கல்லூரிகளை மூடுவது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் அதிகளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் நேரடியாக மற்றும் ஆன்லைனில் வழி தேர்வுகளை நடத்துவது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.