இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது ஒமிக்ரான் வைரஸ் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது தொற்றால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அந்த 3-வது அலையின் தாக்கம் 2-வது அலையை விட குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் தொற்று பவுவதன் அடிப்படையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தில் இருக்கும்போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். டெல்டா வகை கொரோனா பரவியபோது 3-வது அலையை ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதேபோன்று ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட உள்ள 3-வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, மிதமான ஊரடங்கு கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தால் ஒமிக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்” என்று ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் தெரிவித்துள்ளார்.