சுவிட்சர்லாந்தில் 2 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு விண்ணப்பம் ஒன்றை முன் வைத்துள்ளனர்.
அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிடுவர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி கிடையாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்க்கையை கழித்திருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தை தானாக சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக முடியாது .
இதனால் Social Democratic Party கட்சியை சேர்ந் paul Rechsteiner என்ற நாடளுமன்ற உறுப்பினரும் Green Party கட்சியை சேர்ந்த Lisa Mazzone என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற மேலவையில் ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் சுவிட்சர்லாந்தில் பிறக்கும் வெளி நாட்டினரின் குழந்தைகளும் தானாகவே சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.