Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வங்கிகளில் இந்த சேவைகள் பாதிப்பு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வாங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்இன்று  தொடங்கியது . இந்த போராட்டத்தில்  சுமார் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர் .  அதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பல அரசு நடத்தும் வங்கிகள்,அவற்றின்  கிளைகள் மற்றும் அலுவலங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு   தாக்கத்தை ஏற்படுத்தும் .

அதன் காரணமாக  வங்கிக் கிளைகள் மற்றும் அலுவலங்களில்  இயல்பான செயல்பாட்டை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை  கடந்த மாதம் அறிவித்தார்.அதில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதாக அறிவித்தார் .

அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்,(aibea) அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு, (aiboc)வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு,(ncbe) அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம்,(aiboa) இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு,(beci) இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம், (inbef)இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ்,(inboc) வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (nobw)மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (nobo) ஆகிய அமைப்புகள் வேலை நிறுத்தபோராட்டாத்தில்  ஈடுபட்டுள்ளனர்

Categories

Tech |