தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை நாய்கள் கடித்து குதறி விட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் அதிக அளவிலான காட்டுப்பன்றிகள், மயில்கள், மான்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் வாழும் மான்கள் தண்ணீர் தேடி வரும் போது அவைகளை நாய்கள் கடித்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒட்டங்குளம் கிராம பகுதிக்கு புள்ளிமான் தண்ணீர் குடிப்பதற்காக வந்தது.
அந்த சமயத்தில் அந்த புள்ளி மானை நாய்கள் வெறித்தனமாக கடித்ததால் மான் இறந்து விட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து விட்டு அதை ஒட்டங்குளம் காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர்.