Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாய் கடித்தால் செய்ய வேண்டியவை… சில குறிப்புகள்…!!

உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம்.

கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு ஏற்றால் போல் சிகிச்சை மேற்கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும்.

காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்து போட்டு கொள்ளலாம்.

காயம்பட்டவருக்கு  ஜன்னி (tetanus) எனும் தடுப்பூசி செலுத்துங்கள். இதனை நாய் கடித்த அன்றே பிறகு 3, 7, 14, 28 மற்றும் 90 நாட்களுக்கு ஒவ்வொரு ஊசி வீதம் ஆறு ஊசிகள் தவறாமல் போட்டு கொள்ளுங்கள்.

ஆறு தடுப்பூசிகள் போட்டு முடிந்த பிறகு ஓர் ஆண்டு வரை நீடிக்கும். இதற்கிடையே மீண்டும் நாய் கடித்தால் இரண்டு ஊசிகள் என ஒரு வார இடைவெளிக்குள் போடவேண்டும். ஆனால் சமிபத்தில் வெளிவந்துள்ள தடுப்பூசிகள் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும், மீண்டும் நாய் கடித்தாலும் ஒரே ஊசி போட்டால் கூட போதுமானது.

தடுப்பூசி போடுவதால் உணவில் கட்டுப்பாடு வேண்டாம். எல்லா வகை உணவையும் சாப்பிடலாம். ஆனால் மது மட்டும் அருந்தாதீர்கள். மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைத்துவிடும்.  நுண்கிருமியினால் விளையும் சேதம் அதிகரித்து விடும்.

Categories

Tech |