Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வழித்தவறி ஊருக்குள் வந்த புள்ளி மான்…. கடித்து குதறிய நாய்கள்…. விரைந்து சென்ற வனத்துறையினர்….!!

நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் புள்ளி மான்கள் சில சமயம் வழித்தவறி ஊருக்குள் வரும். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த ஒரு பெண் புள்ளி மான் வழித்தவறி வந்துள்ளது.

இதனை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த மானை வனப்பகுதிக்குள் புதைத்துள்ளனர். மேலும் இறந்த மானுக்கு 2 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |