நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துளசிப்பட்டி காட்டுப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பலத்த காயத்துடன் இருந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மானை விளாத்திகுளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி குருமலை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.