Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு…. பிரதமர் மோடி செய்த செயல்….!!!!

மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நாக்பூர்-பிலாஸ்பூர் வழித் தடத்தில் 6வது வந்தே பாரத் ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, 2ஆம் கட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாங்கி அதில் பயணம் மேற்கொண்ட மோடி, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்கிறார். மேலும் விதர்பா நகரில் நடைபெறயிருக்கும் விழாவில் ரூபாய்.1,500 கோடி மதிப்புள்ள இரயில்வே திட்டங்களையும் மோடி துவங்கி வைக்கிறார்.

 

Categories

Tech |