Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை முதல் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு… முதல் படமாக ‘மாஸ்டர்’ ரிலீஸ்…!!!

கேரளாவில் பத்து மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கேரளாவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்குகளை திறக்க மறுப்பு தெரிவித்தனர். பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும் , அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் . இதையடுத்து திரையரங்க உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது . தற்போது மந்திரி பிரனாய் விஜயன் நடத்திய பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் ‘கேரளாவில் உள்ள திரையரங்குகளுக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கேளிக்கை வரி ரத்து செய்யப்படும், கடந்த 10 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகளின் மின்சார நிலை கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் , மீதி தொகையை தவணை முறையில் செலுத்தலாம்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து கொச்சியில் பிலிம்சேம்பர் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில்  முதல் படமாக நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்யவும் அதன் பின்னர் மலையாள படங்களை திரையிடவும்  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரள திரையரங்குகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது .

Categories

Tech |