Categories
தேசிய செய்திகள்

நாளை திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான குகைப்பாதை…!!

ஹிமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் குகை பாதை நாளை திறக்கப்படுகிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் மணாலியில் உள்ள லா ஹவுஸ் பள்ளத்தாக்கு  பகுதியை  இணைக்கும் வகையில் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து அடல் குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த குகை திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பத்தாண்டுகளின் முடிக்கப்பட்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக இந்த குகை பாதைக்கு அடல் என பெயரிடப்பட்டது.

கடல்மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குகை பாதை மூலம் ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின்  நகருக்கு செல்லும்போது பயண நேரம் 4 மணி நேரம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் பனி பொலிவு அதிகமாக இருக்கும்போது லாஹவ் ஸ்வீட்டி பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் ஆறு மாதங்கள் வரை போக்குவரத்து தடைபடும்.

ஆனால் இந்த குகைப் பாதை மூலம் ஆண்டு முழுவதும் எவ்வித தடையுமின்றி போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில்  தினமும் 3 ஆயிரம் கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

உலகின் மிக நீளமான இந்த குகை பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறப்பு விழாவுக்கான பணிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் திரு ஜெரத்தாகூர் ஆகியோர் மேற்பார்வை இட்டனர்.

Categories

Tech |