Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை கடந்த வருடம் அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்றது. இதனால் சுகாதார துறை அதிகாரிகள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்போது வரை 5,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 51 பேர் கொரோனா பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து 4,989 பேர் கொரோனா சிகிக்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 271 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |