வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில் கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை ஆட்டி வாக்கு சேகரித்தார் .
திண்டுக்கல் மக்களாவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பழனி வட்டாராட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பகுதிக்கி வந்தபோது அங்கு வயலில் பெண்கள் வேலையில் ஈடுபட்டிருந்தன தங்கள் குழந்தைகளை மரக்கிளைகளில் கட்டிப்போட்டிருந்தன
.அங்கு சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளை தாலாட்டும் வகையில் தாலாட்டு பாடி வாக்குகளை சேகரித்தார் பின்னர் அங்கு வேலை செய்த பெண்களிடம் உங்கள் வாழ்வு ஒளிபெற கரும்பு சின்னத்துக்கு வாக்கலிங்கள் என்றார் .