Categories
உலக செய்திகள்

நான் என்ன கேட்டேன்… நீங்க என்ன அனுப்பி இருக்கீங்க?… வாடிக்கையாளர் புகாரால் நொந்துபோன உரிமையாளர்…!!!

வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் முக கவசம் ஆர்டர் செய்துவிட்டு பின்பு அளித்த புகார் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜடா’ஸ் வால்ட் என்ற பெயரில் ஷர்ட் கள், பெல்ட் மற்றும் முகக்கவசம்  ஆகியவை அடங்கிய சிறிய ஆன்லைன் ஷாப்பை  ஜடா மெக்ரா என்ற பெண் ஒருவர் நடத்தி வருகிறார். அதில்  பெண் ஒருவர் டப்சன்  முகக்கவசம்  ஆர்டர் செய்துள்ளார். அதனை  அந்த பெண்ணின் முகவரிக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் தவறான முகக்கவசம்  ஆர்டர் என்ற ஈமெயிலை இவருக்கு அனுப்பியுள்ளார்.அந்த ஈமெயிலை பார்த்து மெக்ரே உடனே அவருடன் பேசியுள்ளார் .அதற்கு அந்தப் பெண் நான் ஒரு டசன் முகக்கவசத்தை ஆர்டர் செய்து இருந்தேன். ஆனால் 12 மட்டுமே உள்ளது. எனக்கு  முகக்கவசம் அனைத்து தேவைப்படுகிறது .இல்லையென்றால் என்னுடைய பணத்தை திருப்பித் கெடுத்துவிடுங்க என்றுஅவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் சிறிய தொழில்களுக்கு உதவ நினைத்தேன். ஆனால் நீங்கள் தவறான ஆர்டரை  அனுப்பி வைத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் மன சோர்வடைந்த மெக்ரே  டசன் என்றால் 12 தானே நான் சரியாகத்தான் அனுப்பி உள்ளேன். அதனால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும் நீங்கள் ஏமாற்றம் அடைந்தற்காக 5 டாலர் கூப்பனை  இலவசமாக அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் நான் டசன் என்றால் 12 என்று  கேள்விப்பட்டதே  இல்லை   என்று  தெரிவித்துள்ளார்  .மேலும் விலைப்பட்டியலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லையா என்று கூறி அதில் நான் டப் சென்(dubzen) என்றும் டப் என்றால் 20 என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |