ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபுரம் பகுதியில் சுந்தர மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆட்டோ டிரைவரான சிங்க துரை என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வருவதும், செல்வதும் வழக்கம். இந்நிலையில் சிங்கதுரை பனையூர் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை அழைத்துக் செல்வதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து, பிரமோத் மற்றும் அவரின் நண்பர்களுடன் நின்று கொண்டு சிங்கதுரை சென்ற ஆட்டோவை வழிமறித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறில் இசக்கிமுத்து, பிரமோத் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து சிங்கதுரை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுப்பதற்காக சிங்க துரை தனது ஆட்டோவில் வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த இசக்கிமுத்து மற்றும் பிரமோத் இணைந்து சிங்க துரையிடமிருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சிங்க துரை அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சிங்க துரையின் தந்தையான சுந்தரமூர்த்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிங்க துரையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற பிரமோத் மற்றும் இசக்கிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.