வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலையை முடித்து விட்டு வீட்டில் படுத்து உறங்க சென்றுள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரின் அத்தையான பேச்சி பிரம்மசக்தி என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பெருமாள் அங்கு தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெருமாளின் தலையை யாரோ அரிவாளால் வெட்டியாதல் அவர் பலத்த காயமடைந்து இறந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும் அவரின் உறவினர்களான இரண்டு பெண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறில் பெருமாள் அந்த இரண்டு பெண்களையும் அரிவாளால் வெட்டியதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் பெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.