அமெரிக்காவில் உணவகத்தில் முகக் கவசம் அணிய வில்லை என்று உணவக மேலாளர் திட்டியதால் வேலையை விட்டு சென்று விட்டார்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்தில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அப்போது அந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட ஒரு ஜோடி வந்துள்ளது . அவர்களுக்கு இந்தப் பெண் உணவு பரிமாற சென்றார் . அப்பொழுது உணவு சாப்பிட வந்த பெண் இவரிடம் முகக் கவசம் அணியும்படி கூறியுள்ளார் . ஆனால் என்னால் முகக் கவசம் அணிய முடியாது என்றுஅந்த பெண் மறுப்பு தெரிவித்துயுள்ளார் . அதனால் அவர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது . அதனை பார்த்துக் கொண்டிருந்த உணவக மேலாளர் இருவரையும் சமாதானப் படுத்தி உள்ளார்.
அதன் பிறகு ஏன் முகக் கவசம் அணிய வில்லை என்று அந்த வேலை செய்யும் பெண்ணிடம் உணவக மேலாளர் கேட்டு உள்ளார். அதற்கு அந்த பெண் முகக் கவசம் அணிந்தால் லிப்ஸ்டிக் அழிந்துவிடும் என்று பதில் அளித்தார் . இதனைக் கேட்ட உணவக மேலாளர் அந்தப் பெண்ணிடம் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று அவரை கண்டித்து உள்ளார். மேலும் இதனை பொறுக்க முடியாமல் கடுங்கோபத்துடன் அந்தப் பெண் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி தூக்கி எறிந்து விட்டு தான் வேலையை விட்டு விலகி கொள்வதாக கூறினார். அதனால் கோபமான அந்தப்பெண் உடனடியாக அந்த உணவகத்தை விட்டு வெளியேறினர் இதனை அந்த உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த அனைவரும் பார்த்தன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/aa80c17b-475c-4de3-94ef-6459ad919838