Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நான் குடிக்கவே மாட்டேன்” வற்புறுத்தியதால் நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

மது அருந்துவதற்கு வற்புறுத்தியதால் நடந்த தகராறில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராமனின் நண்பரான சாமுவேல் என்பவர் மதுபானங்களை வாங்கிக்கொண்டு அழகிய நகர் பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த சாமுவேல் என்பவர் ராமனையும் மது அருந்துவதற்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ராமன் மது அருந்த மறுத்ததில் இருவருக்கும் இடையே கைத்தகராறு ஏற்பட்டு சாமுவேல் ராமனை தள்ளிவிட்டார்.

இதனால் ராமன் அருகில் இருக்கும் ஓடையில் தலைக்குப்புற விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |