பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் . அப்போது ஆரி ‘நேற்று ரம்யா நான் சேவ் கேம் விளையாடுவதாக கூறினார் என்று கூறிக் கொண்டிருக்க குறிக்கிட்ட’ ரம்யா சேவ் கேம் என சொல்லவில்லை ஒன் சைடு என்றுதான் சொன்னேன்’ என்கிறார் .
#Day96 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/D8uhbaQFir
— Vijay Television (@vijaytelevision) January 8, 2021
‘இரண்டையும் சொன்னீர்கள்’ என ஆரி கூற மீண்டும் குறுக்கிட்டு பேசுகிறார் ரம்யா . இதனால் கடுப்பான ஆரி ‘நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேசவேண்டாம். அதுதான் ரூல்ஸ் .அத பாலோ பண்ணுங்க .உங்க குறையை சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தாலே போதும்’ என்று கூறி ரம்யாவின் வாயை அடைகிறார் . கடந்த சில நாட்களாகவே ரம்யா , பாலாஜியுடன் இணைந்து ஆரியை டார்கெட் செய்து மோதி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர் .