‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள்’ என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் ,களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிப்பில் எஃப்ஐஆர், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா மோகன் ‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவன்’ என்று கூறியுள்ளார் . பேட்டியில் ‘மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்கிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே ?’ என்ற கேள்விக்கு நடிகை மஞ்சிமா மோகன் ‘சில படங்களை அப்படியே விட்டு விட வேண்டும் .
‘குயின்’ பட ரீமேக்கில் நான் நடித்துள்ளேன் . ஆனால் நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள். ஒரு படத்திற்கு மொழி, களம் என அனைத்தும் பொருத்தமாக இருக்கவேண்டும் . மலையாள படம் மலையாளத்தில் தான் பார்க்க வேண்டும். அதே போல் தமிழ் படம் தமிழில் ,தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும் . வெற்றியடையும் எல்லா படங்களையும் ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை . ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.