‘நான் சாக விரும்புகிறேன்’ என நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை மீரா மிதுன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். சமூக வலைத்தளங்களில் நடிகை மீரா மிதுன் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தற்கொலை எண்ணம் வருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அதில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மீரா மிதுன் ‘மன அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் வருகிறது . எனக்கு மன அழுத்தம் இருப்பதை நான் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறேன் . ஆனாலும் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். நான் இறந்தால் அதற்குக் காரணமானவர்களை தூக்கில் போட வேண்டும் . சமூக வலைத்தளம் மூலம் தான் நான் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் . இந்த வலியை நிறுத்த நான் சாக விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார் .