Categories
இந்திய சினிமா சினிமா

நான் தரேன்….! “பிளாஸ்மாவை கொடுக்க முன்வந்த கனிகா கபூர்”… ரசிகர்கள் பெருமிதம்..!!

கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தன்னுடைய பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். 

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. இன்னும் அதனுடைய ஆட்டம் முடிந்த பாடில்லை. கொரோனோவால் பல லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். அதுபோல பாலிவுட் பாடகி கனிகா கபூரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

அதனால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். இதனால் கொரோனாவால் பதிப்படைந்தவர்களுக்கு  பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை அளிக்க படும். இதற்காக தனது பிளாஸ்மாவை  நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார் என்று தகவல் பரவியுள்ளது.

இதை பற்றி அவர் என்ன சொன்னார்.?

நான் என்னுடைய  இரத்தத்தையும் பிளாஸ்மாவையும் ஆராய்ச்சிக்காக கொடுப்பதற்கு விரும்புகிறேன்.  மற்றவர்களுக்கு உதவி செய்யவிருப்பம் உள்ளது என்று சொல்வதற்கு மருத்துவமனைக்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த அளவு உதவியை நான் செய்ய விரும்புகிறேன். அது மட்டுமின்றி நேற்று எனது ரத்தத்தை கொடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

இதனை அடுத்து லக்னோவில் உள்ள கே. ஜி.எம்.யு., என்று அழைக்கப்படும் கிங் ஜியார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனிகா கபூருக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் பிளாஸ்மா எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன.?

இந்த சிகிச்சை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளை பிரித்து எடுப்பார்கள். பிறகு அதை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு சிகிக்சை அளிக்க படும். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி திறன் மற்றும் ரத்த அணுக்களும் அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கும் பொழுது கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு உடல் தயாராகும்.

 

Categories

Tech |