Categories
உலக செய்திகள்

நான் வளர்ந்த இடம் எங்க இருக்குனு தெரியல…. மாயமான தீவு …. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் …!!!

இளம்பெண் ஒருவர் சிறு வயதில் கண்ட தீவு ஒன்று தற்போது காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்காக போராடி வரும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் முதல் பருவநிலை மாற்ற ஆய்வாளர்கள் பலரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தபோது  அவர்கள் சந்தித்தது அலட்சியமும், அவமானமும் மட்டும்தான். இந்த பருவ நிலை மாற்றத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் கடல்மட்டம் உயர்ந்து  நிலப்பரப்பை கவர்ந்து விடும் என்று அவர்கள் கூறியபோது, சமூக ஊடங்களில் கமெண்ட் போடுவதோடு நிறுத்திவிட்டனர். ஆனால் தற்போது இந்தப் பருவநிலை மாற்றத்தால் ஒரு தீவே காணாமல் போயுள்ளது. இதற்கு முன்பாக  இந்தியா – இலங்கையை இணைக்கும் குமரிக்கண்டம் என்ற பகுதி கடல்நீரினால் மூழ்கி விட்டது என்று வரலாற்றில் படித்திருக்கிறோம்.

ஆனால் இப்போது தான் சிறுவயதில் கண்டு வளர்ந்த தீவு ஒன்று காணாமல் போய் இருப்பதாக Gladys என்ற இளம்பெண்  கண் கலங்கி நிற்கிறார்.மேலும் Gladys சாலமோன் தீவு கூட்டங்களில் ஒன்றான  Kale தீவுதான் தற்போது கடலால் கவரப்பட்டது .கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக Gladys தனது பெற்றோர்களுடன் இந்த தீவுக்கு வந்து தன் சகோதரிகளுடன் அங்குள்ள கடற்கரையில் விளையாடுவாராம் .அப்போது இந்த தீவில்அடர்ந்த காடு ஒன்று இருந்ததாகவும் ,ஆனால் தற்போது காடு இருந்த இடத்தில் காய்ந்த மரங்கள் மட்டுமே கடலுக்கடியிலிருந்து எட்டிப்பார்த்து நிற்கிறது என Gladys கூறினார்.

Categories

Tech |