Categories
உலக செய்திகள்

நாட்டை மூடிடுவேன்!… ஜோ பிடன் உறுதி… காரணம் என்ன தெரியுமா?…!!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்தால் நாட்டை மூடி விடுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியிருக்கிறார்.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,75,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜோ பிடன் அளித்துள்ள பேட்டியில், ” உயிரை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

ஏனென்றால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது. நாட்டை மூடுவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரை செய்தால், நான் அதை மூடி விடுவேன். டொனால்ட் ட்ரம்ப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஊக்குவிக்கிறார். மக்கள் மீண்டும் வேலைக்கு வரவேண்டும் என்று கூறுகிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |