நேட்டோ படைகள் திரும்ப பெறுதலே நாட்டின் பாதுகாப்பு மோசமடைவதற்கு காரணம் என்று ஆப்கான் அதிபர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்திரவிட்டுள்ளார். இதனால் நேற்றிலிருந்து நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது. மேலும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். இது குறித்து ஆப்கான் நாடாளுமன்றத்தில் அவர் பேசிய போது “அமெரிக்கப் படைகள் தீடிரென வெளியேறும் முடிவை எடுத்ததினால் தான் நாட்டில் பதற்றம் நிலவுகிறது. தற்போதுள்ள மோசமான நிலைமைக்கு நேட்டோ படைகள் திரும்ப பெறுதலே காரணம்” என்று அஷ்ரப் கனி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.