நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை.
தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என பாரதிராஜா தெரிவித்தார்.