Categories
தேசிய செய்திகள்

நாட்டிற்கு தேவை சுவாசம் தான்… புதிய வீடு இல்லை… ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு…!!

டெல்லியில் நடைபெறும் சென்டில் விஸ்டா என்ற புதிய திட்டத்தை விமர்சித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய தலைநகரான டெல்லியில் ‘சென்டில் விஸ்டா’ என்ற திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், மற்றும் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கு புதிய இல்லம் போன்றவற்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு 13,450 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம் செயல்படுத்துவது தேவையற்றது என விமர்சித்துள்ளார். மேலும் அவர் “நாட்டிற்கு தேவை சுவாசம் தான், பிரதமரின் புதிய வீடு அல்ல” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் ‘செட்டில் விஸ்டா’ திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின் புகைப்படத்தையும், ஆக்சிஜன் நிரப்ப மருத்துவமனைகள் மக்கள் வரிசையாக சிலிண்டருடன் நிற்கும்  புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |