Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி சோதனை…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பற்றி ஒருவரைப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் இருக்கும் கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு கொட்டகையில் நாட்டு துப்பாக்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த துப்பாக்கிய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |